இவ்விதழில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான கட்டுரைகள்:
ஜெயித்துக் காட்டுவோம் வா!:
‘போட்டித்திறன்’ குறித்து இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
வழிகாட்டும் வள்ளுவம்:
நமது பிள்ளைகளுக்கு வாழ்வியல் நெறிகளைக்கற்றுத்தர திருக்குறளைவிட மேலான நூல் என்று வேறொன்றும் இல்லை. வள்ளுவத்தை வாழ்வியலாக ஆக்கிக்கொள்ள குழந்தைகளை எப்படிப் பழக்குவது என்பது குறித்ததுதான் இக்கட்டுரை.
பள்ளிக்கூடம் தேடலாமா!:
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இது அட்மிஷன் நேரம். நமது பிள்ளைகளுக்கான பள்ளியை எப்படித்தேர்ந்தெடுப்பது என்று குழம்பிக்கொண்டிருப்போம். ’அந்தக்குழப்பம் தேவையில்லை, இந்த விஷயங்களைப் பரிசீலித்தபிறகு பள்ளியை முடிவு செய்யுங்கள்’ என்று டிப்ஸ் தருகிறது இக்கட்டுரை.
இவை தவிர,
இரும்புச்சத்து இருக்கா?
உள்ளமும் நலம்தானா?
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
சிறுதுளி வனிதா மோகன் அவர்களின் பேட்டி...
என்று பல்வேறு பயனுள்ள கட்டுரைகள் ஜனவரி -2017 இதழில் வரிசைகட்டி நிற்கின்றன.
On stands price : Rs. 50/-