மனையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது என்ன? வில்லங்கம் இல்லாத வீட்டு மனைகளை வாங்குவதற்கான வழிகள்? பெரும்பான்மையான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எவ்வாறு ஏமாற்றக் கூடும்? மனையை பார்வையிடுவதற்கான வழிமுறைகள்? எந்த மனை வீடு கட்ட ஏற்றது? தவணை முறையில் மனை வாங்குவது நல்லதா? சொத்துக்களை கண்காணிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? சர்வேயர் அளக்காமல் மனைகளை வாங்கலாமா? விவசாய நிலத்தை வாங்கும்போது என்னென்ன பிரச்சினைகள் அறிமுகம் இல்லாத இடத்தில் மனை வாங்கும் போது உஷாராக இருக்க வேண்டியவை? போன்ற மிக முக்கிய விஷயங்களை பல்வேறு தகவல் தளங்களில் இருந்து நமக்காக தொகுத்துத் தந்திருக்கிறார் ரியல் எஸ்டேட் நிபுணரும் ஆலோசகருமான திரு. ளு.ளு.சு. பிரிட்டோ அவர்கள். இது மட்டுமன்றி, பத்திரப்பதிவு செய்யும் முறை, அப்ரூவல்களின் வகைகள் மற்றும் அவசியம், முக்கிய அரசாங்க ஏடுகள், சட்ட ரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றையும் இந்த எளிய புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் திரு. ளு.ளு.சு. பிரிட்டோ. வீட்டு மனை வாங்கும் பொது மக்கள் அனைவருக்கும் பெரிதும் பயனிளிக்கக்கூடிய இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.