இந்த நாகரீக அவசரயுகத்தில் மனிதன் பல்வேறு நோய்களுக்கும், உபாதைகளுக்கும் ஆளாகிறான். இவை வெறும் சுற்றுசூழல் சீர்கேட்டினால் மட்டுமல்ல, உணவு பழக்கங்களினாலும், வாழ்க்கை முறையினாலும் ஏற்படுகின்றன. நம்மிடையே உள்ள பெரும்பாலோனோர்க்கு நோய்கள் பற்றி மட்டுமல்ல, தன் உடல் பற்றியே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எந்த வேளையில் எதை சாப்பிட வேண்டும்? சாப்பிடக் கூடாது? உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகள் ஏன் ஏற்படுகின்றன? இதெல்லாம் அறியாதவர்களாக அல்லது அறிந்துக் கொள்ள ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த ஆடை, அணிகலன் போன்ற பொருட்களை தேர்வு செய்வதிலும் அணிந்துக் கொள்வதிலும் காட்டுகிற அக்கறையை தங்கள் ஆரோக்கியத்தின் பாற் காட்டுவதில்லை. ஒரு சாரர் இப்படி இருக்கிறார்கள் என்றால், மற்றொரு சாரர் ஒரு சிறு உடல்சார்ந்த பிரச்சனைக்கும் பயந்து போய் ஆயிரக்கணக்கில் செலவழிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நமது உடல் எப்படிப்பட்டது? நமக்கு ஏற்படும் உடல் உபாதைகளின் மூலகாரணம் யாது? என்பதை தெளிவுபடுத்துகிற நூல் தான் இது. உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் என்பது மிகப்பெரிய கடலாகும். அதிலிருந்து ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் இந்நூல் வழியாக உங்களிடம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறோம். தமிழகத்தின் புகழ் பெற்ற மருத்துவர்கள் சிலரின் ஒருமித்த கருத்துகள் தான் ‘வீட்டு டாக்டர்’ என்கிற இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன ..