நமது பிராம்ப்ட் பதிப்பகம் ரியல் எஸ்டேட் துறைக்காக வெளியிட்டிருக்கும் இரண்டாவது புத்தகம் இது. முதல் புத்தகமான ‘ரியல் எஸ்டேட் வழிகாட்டி’ எனும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதினையயாட்டி பிராம்ப்ட் ஆசிரியர் குழுவின் துணை கொண்டு ‘ரியல் எஸ்டேட் உஷார்’ எனும் இந்நூலை வெளியிட்டிருக்கிறோம். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்? உங்கள் வீட்டுமனை எந்த வகை நிலத்தில் அமைய வேண்டும்? மனை வாங்கும் போது மறக்கக்கூடாத விrயங்கள் என்ன? புதிய ஃப்ளாட், பழைய ஃப்ளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? வீட்டுமனை மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி? ரியல் எஸ்டேட்டில் ஏமாற்றுப் பேர்வழித் தரகர்கள் எப்படி உள்eனர்? போன்ற பல்வேறு ரியல் எஸ்டேட் சார்ந்த ஆலோசனைக் கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி, ரியல் எஸ்டேட்டின் அடிப்படைச் சட்டங்கள், அசையா சொத்துக்கள் வாங்குவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள், சொத்துக்கள் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பில் உள்ள சட்டநிலை போன்ற முக்கிய சட்ட ஆலோசனைக் கட்டுரைகளும் இந்நூலில் ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுநர்கள், புரமோட்டர்கள் ஆகியோர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் அனைவருக்கும்பெரிதும் பயனளிக்கக்கூடிய ரியல் எஸ்டேட் உஷார் எனும் இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.