ஜென் கதைகள் பொறுத்தவரை அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. ஒரு பக்கத்திலான குட்டிக் கதை, குறைவான பாத்திரங்கள், யதார்த்தமான துவக்கம், எதிர்பாராத க்ளைமாக்ஸ் இந்த கட்டுக்குள் தான் ஜென் கதைகள் பெரும்பாலும் அமையும். சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும். ஆனால், அந்த கதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும். சுவாரசியம் தரக் கூடிய, படித்து முடித்ததும் நம்மை வியக்க வைக்கக் கூடிய, மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் பொருந்தக் கூடிய கதைகளை மட்டுமே தேடிப் பிடித்து, சுவை கூட்டி , மெருகேற்றி இங்கு ஒரு நூலாக தொகுத்துத் தந்திருக்கிறோம். உங்களது அறிவுத்தேடலுக்கு இந்த அரிய நூலாக நல்ல தீர்வாக இருக்கும் என நம்புகிறோம்.