புத்தம் புதிதாக ஃப்ளாட் வாங்கி குடியேறுபவர்களும் சரி, பழைய வீட்டை வாங்கி மறு சீரமைப்பு செய்து குடியேற நினைப்பவர்களும் சரி, அல்லது மனை வாங்கி தாமே முயன்று வீடு கட்ட நினைப்பவர்களும் சரி, சொந்த வீடு கட்டுதல் என்கிற அனுபவத்தில் பெரும்பாலும் எல்.கே.ஜி. பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். அதற்காக தாங்கள் சொந்த வீடு கட்டும்போது சிவில் பொறியில் படித்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால், குறைந்தபட்சம் ஒரு வீடு அல்லது கட்டுமானம் உருவாக்கப்படுவதில் உள்ள பல்வேறு நிலைகளையும், கையாளும் முறைகளையும் கற்றிருத்தல் அவசியம். அதற்கு இந்நூல் உங்களுக்கு நிச்சம் வழிகாட்டும். திட்ட அனுமதி பெறுவது. மண்ணுக்கேற்ற அஸ்திவாரம், நிலத்தடி நீரை ஆய்வு செய்வது. கட்டுமானப் பொருட்களின் தரம் அறிவது. மின் இணைப்பு, பிளம்பிங், பெயிண்டிங் பணிகளின் போது கவனிக்க வேண்டியது. குடிநீர்த் தொட்டி அமைப்பு போன்ற பல்வேறு வகையான அரிய தகவல்களும், ஆலோசனைகளும் சொந்தவீடு கட்டும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பயனைத்தரும்.