வெகு ஆண்டு காலம் முன்புவரை வமக்கு சிமெண்ட்டும் பரிச்சயகம் இல்லை. கான்கிரீட்டும் பரிச்சயமில்லை. சுண்ணாம்பு காரை கொண்டுதான் மாட மாளிகைகளையும், மணி மண்டபங்களையும் கட்டி வந்திருக்கிறோம். அதுவும் தரைதள வீடு எனில், செம்மண் தவிர வேறு கலவைப் பொருளையும் நாம் அறிந்ததிலை. சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சிமெண்ட் மற்றும் மணலுடன் புளூ மெட்டல் எனப்படும் ஜல்லியை சேர்த்து உருவாக்கப்படும் கான்கிரீட்டிற்கு ஏக வரவேற்பு. தற்போது கட்டுமானம் என்றாலே கான்கிரீட்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. கட்டிடம் நிலைத்து நிற்பதற்கும் அதன் உறுதி நிர்ணயம் செய்யப்படுவதற்கும் கான்கிரீட்தான் அச்சாணி. ஆனால், சாதாரண பொதுமக்களும், கட்டுமான தொழிலாளர்களும், ஏன் சில காண்ட்ராக்டர்கள் கூட கான்கிரீட்டைப் பற்றி முழுதாக அறிந்திருக்கவில்லை. கான்கிரீட் வெகு சீக்கிரம் கட்டிப் போகாமல் இருப்பதற்கும், அதன் உறுதியை கூட்டுவதற்கும் ஏராளமான தொழிற்நுட்பங்கள் வந்திருப்பது கூட அவர்கள் அறியாதது. இன்னும் சொல்லப்போனால், கான்கிரீட்டில் எஸ்.சி.சி., ஆர்.எம்.சி., ஆர்.சி.சி., எஸ்.எல்.சி., ஸ்டாம்ப்டு, ஏ.ஏ.சி., எஃப். ஆர்.சி. போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கான்கிரீட்டுகள் நடை முறையில் உள்ளது என்பது கூட பெரும்பாலானோருக்குக் தெரியாது. இந்த நூல் கான்கிரீட்டின் பல வகைகளையும் கூறுகளையும், சிறப்புகளையும் கூறுவதோடு கான்கிரீட்டை மிச்சப்படுத்துவதற்கும், கையாளுவதற்கும் ஆலோசனை கூறுகிறது.