எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்கல் இவையன்றி, எவருடைய அன்றாட அலுவல்களும் துவங்காது, சாதாரண வருமானம் உடையவர்களின் வீடுகளில் கூட, குறைந்து 15,20 வகையான மின்சாதனங்களாவது நிச்சயம் இருக்கும். அந்த அளவிற்கு, மின்சாதனங்களை நம்பியே நமது பொழுது விடிகிறது, முடிகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அனைத்துவகையான வீட்டு மின்சாதனங்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கிறோம்? மின்சாதனங்களை இயக்குவதிலும், பராமரிப்பதிலும் நாம் செய்யும் தவறுகள் உயர்ரக மின்சாதனங்கள் பழுதுபடுவதற்கும். வெகுசீக்கிரமே பாழ்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. அவை அனைத்திற்குமே சரியான தீர்வாக இப்புத்தகத்தில் அரிய ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சாதாரண காலிங்பெல் ரிமோட் கண்ட்ரோல் முதல், வாஷிங் மிஷின், ரெப்ரிஜிரேட்டர் வரையிலான 50 வகை மினசாதனங்களை கையாளுவதற்குமு;, பராமரிப்பதற்கும் இப்புத்தகம் நமக்கு வழிகாட்டும். அதோடு மட்டுமின்றி, மின்பராமரிப்பின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும், கையாள வேண்டிய உபகரணங்கள் பற்றியும் சொல்லப்பட்டிருப்பது இதன் சிறப்பு. எங்கும் காணப்படாத, இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கப்படாத அறிய ஆலோசனைகளைத் தமிழில் தொகுத்தளித்திருக்கும் இப்புத்தகம் நிச்சயம் வாசகர்களிடையே வரவேற்பினைப் பெறும்.