அறிவியல் கண்டுபிப்புகள் மனிதனின் பயன்பாடுகளை இன்னமும் வசதியாக்க உதவி வருகின்றன. அதன் வரிசையில் ஒரு முழு வீட்டையே மின்னணு மயமாக்கும் முயறிசிதான் ஸ்மார்ட் ஹோம் ஆகும். நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க, இங்கிலாந்து போன்ற அயல்நாடுகளில் இது சர்வ சாதாரணம். ஒட்டுமொத்த வீடும் மின்னணு இயந்திரங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். அதுபோன்ற வீடுகள் இங்கும் வரத் துவங்கிவிட்டன. மின் வசதியை மிச்சப்படுத்துவதற்காகவும், மனிதனைச் சார்ந்த வேலைகளை இலகுவாக்குவதற்கும், பிழையின்றி பணிகளைச் செய்வதற்கும் இது போன்ற ஸ்மார்ட் வீடுகள் தேவைப்படுகின்றன. பங்களாக்கள், தனி வில்லாக்கள் போன்றவற்றிற்குத்தான் ஸ்மார்ட் ஹோம் கான்செப்டுகள் சரியாக வரும் என்பது தவறான கருத்து. சாதாரண வீட்டிற்கும் சரி, ஃப்ளாட்சிஸ்டம் வீட்டிற்கும் சரி, சில ஆயிரங்கள் செலவில் ஸ்மார்ட் ஹோம்ஸ் ஆக மாற்றிக் கொள்ளலாம் என்பதை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்தால் உங்களுக்கே புரிய வரும். காலத்திற்கேற்ற தொழிற்நுடபங்களை எளிய தமிழில் கொடுப்பதில் வல்லவரான திரு. சுப. தனபாலன் அவர்களின் இந்நூல் மிகவும் பயன்மிக்கதாகும்.