இவர் கும்பகோணத்தில் பிறந்தவர். குடந்தை நகர மேல்நிலைப்பள்ளியில் படித்தபின், குடந்தை மகளிர் கலைக்கல்லூரியில் படித்து, பிறகு மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் சுமார் 7 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திருமணமாகி சென்னையில் குடியேறிப் பின், சென்னையில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி, தற்சமயம் பல பொறுப்புகளையும் வகிக்கிறார். தலைநகர் டெல்லியில் இன்டீரியர் டெகரேஷன் படித்துள்ளார். வீடு மற்றும் குடும்ப அனுபவங்களுடன், இன்றைய கால கட்டத்துக்கேற்ப சுத்தமான, சுகாதாரமான சூழலைக் கருத்தில் வைத்து, வீட்டு அலங்காரம் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தொலைக்காட்சியில் இன்டீரியர் தொடர்பான பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். நாளிதழ்களிலும், வார மாத இதற்களிலும் வீட்டை அழகாக வைத்துக் கொள்வது தொடர்பான தொடர் கட்டுரைகள் பல எழுதி வருகிறார். அழகான வீடு என்ற நூல் இவருடைய முதல் நூல். இல்லமும் இன்டீரியரும் என்னும் இந்நூல் இல்லத்தின் மீதான அழகுக் கலை ரசனையைத் தூண்டி, அழகியலை நம் மனத்துள் புகுத்துகிறது. விருந்தினர்களைக் கவரும் வகையில் வீட்டின் அனைத்து அறைகளையும் எப்படி அமைப்பது? செலவே இல்லாமல் இன்டீரியர் அலங்காரத்தை எவ்வாறு மேற்கொள்வது? போன்ற அரிய யோசனைகளை அள்ளித் தருகிறார் சரஸ்வதி ஸ்ரீனிவாசன்.