ஒரு மனையில் ஒரு குடும்பம் வசிப்பதற்கு பதில் அடுக்கு மாடி சிஸ்டத்தில் நான்கு குடும்பங்கள் அதாவது நான்கு வீடுகள் கட்டப்படும் போது மனையின் விலை நான்கு வீடுகளுக்கும் பங்கிடப்படுகிறது. இதனால், வீட்டின் விலை குறைகிறது. தனியே மனை வாங்கி, தனி வீடு கட்டுவதற்கு வசதி இல்லாத பலருக்கும் ஃப்ளாட் வீடுகளே மனக்குறையைத் தீர்த்துவைக்கின்றன. இந்நூலில் போலி பில்டரை கண்டறியும் வழிகள், நல்ல பில்டரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? கட்டுமானம் துவங்காமலேயே பதிவு செய்வது நல்லதா? பில்டர் துணை இல்லாமல் தனிவீடு கட்டலாமா? வீட்டு ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டியவை, கம்ப்ளீஷன் சர்ட்டிஃபிகேட் எதற்கு? ஏன்? கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஃப்ளாட் பத்திரப்பதிவு பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை போன்ற பல வி~யங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஃப்ளாட் சம்பந்தமான பிரச்சனையை மக்கள் தன்னிச்சையாக எதிர்கொள் உதவும் கையேடு இது. அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவது நகரங்களில் அவசரமாகிவிட்ட இந்த சூழ்நிலைகளில் பிரச்சனை இல்லாமல் ஃப்ளறாட்டுகளை வாங்குவதற்கும், பில்டர்கள் வாடிக்கையாளர்களிடையே சுமூக உறவு ஏற்படுவதற்கும், இரு சாரருக்குமான சட்ட பாதுகாப்பு நிலை நிறுத்தப்படுவதற்கும் இந்த நூல் மிகவும் உதவும். சட்ட நுணுக்கங்களில் முதிர்ச்சிப்பெற்ற வழக்கறிஞர் திரு. ஆர். செல்வராஜ்கண்ணன் அவர்களின் இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.