நவீன காலத்திற்குத் தேவையான பிளம்பிங் நுணுக்கங்களையும், பொதுவான பிeம்பிங் ஐயங்களையும் இந்த நூல் நிச்சயம் தீர்த்து வைக்கும் என்றே சொல்லலாம். ஆங்கிலம் அறியாத பிளம்பர்கள் கூட, வெகு எளிதாக படித்துப் பொருள் விளங்கிக் கொள்கிற அளவிற்கு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பிளம்பர்கள் மட்டும் அல்லாது சிறு சிறு குழாய் ரிப்பேர்களை தாமே முன்வந்து சரிசெய்து கொள்ள முனைபவர்களுக்கும் இந்நூல் நிச்சயம் ஏற்புடையதாக இருக்கும். திரு. சுப. தனபாலன் அவர்களது சிந்தனையில் உதித்திருக்கும் கட்டுமானத்துறையின் இன்னொரு ஒப்புயர்வற்ற நூலான ‘நவீன பிளம்பிங் வழிகாட்டி’ என்கிற இந்நூல் தற்கால பிளம்பர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். பிளம்பிங் துறையில் தமக்கு இருக்கும் தொழிற்நுட்ப அறிவினை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கு இந்நூல் நிச்சயம் உதவும். இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் கிரீன் பிளம்பிங், பிளம்பர்களுக்கான பயனுள்ள குறிப்புகள் போன்றவை எங்குமே படிக்கக் கிடைக்காத பொக்கிஷம் ஆகும். திரு. சுப. தனபாலன் அவர்களது சீரிய முயற்சியால் வெளிவந்திருக்கும் இந்நூலினைப் படித்து பிளம்பர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயனுறலாம்.