தனி வீடோ அல்லது ஃப்ளாட்டோ எல்லோருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஆசைக் கனவு. ஆனால் எந்த குறையும் இல்லாமல் முழு மனதோடு, எவ்வித வில்லங்கமும் இல்லாமல் ஒரு வீட்டினை கட்டுவதோ, வாங்குவதோ மிகவும் கடினமான காரியமாகும். எல்லோருக்குமே சரியான ஆலோசனை சொல்லக் கூடிய நண்பர்கள், நிபுணர்கள் கிடைப்பதில்லை. ஒரு ஃப்ளாட் அல்லது வீட்டினை வாங்கும்பொழுது வேண்டிய ஆவணங்கள் என்ன? சட்டம் என்ன சொல்கிறது? கட்டுமானப் பொருட்கள் தரமானதா? அதை எவ்வாறு பரிசோதிப்பது? அளவீடுகள் என்ன? பில்டர் அல்லது கான்ட்ராக்டர்களை எப்படி தேர்ந்தெடுப்பது அவர்களிடமிருந்து நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன இதெல்லாம் முழுதும் அறிந்தவர்கள் ஒருவர் இல்லை. கட்டுமானம் பற்றிய தொழில்நுட்ப கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை மட்டும் வெளியிட்டு வரும் எங்களது பதிப்பகம் வாடிக்கையாளர் நலன் பேண அடுக்ககம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய அரிய விஷயங்களை தொகுத்து புத்தமாக வெளியிட்டிருக்கிறது. அடித்தளம் போடுவது முதல் ஃப்ளாட்ஸ் அசோசியேஷன் நிறுவுவது வரை கவனிக்க வேண்டிய முக்கியமான அரிய விஷயங்கள் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.