சட்டம் பற்றிய விழிப்புணர்வு என்பது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடுகளையும், சொத்துக் களையும் வாங்கக்கூடிய மக்கள், சட்ட வழிமுறைகளைஅறிந்து கொள்வதில் ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள். அடிப்படை சட்ட விதிகளைதெரிந்து கொள்ளக் கூட நாம் முயலாததற்கு என்ன காரணம் எனில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சட்டம் பற்றிய எவ்வித பாடங்களையும் ஒருதுளிகூட நாம் படிப்பதில்லை என்பதுதான். இதுபோன்ற குறைகளை தீர்ப்பதற்குத்தான் எளிய தமிழில் அவ்வப்போது சட்ட நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘நமக்கு உதவும் சட்டங்கள்’ என்ற இந்நூலில் பட்டாவின் முக்கியத்துவம், தாய்ப்பத்திரம் தொலைந்துபோனால் என்ன செய்வது? உயிலை எழுதும் முறைகள், சிக்கல்கள், வீடு,மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியதும் செய்ய வேண்டியது என்ன? குடும்ப ஏற்பாடு, பெண்களுக்கான சொத்துரிமை, பாகப்பிரிவினை அடிப்படை விஷயங்கள் போன்ற சிவில் சட்ட நுணுக்கங்கள் எளிய முறையில் உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சிவில் வழக்கின் இன்னொரு முக்கிய அம்சமான வீட்டு வாடகை சட்டத்தின் அடிப்படைக் கூறுகளும் இந்நூலில் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சட்ட நுணுக்கங்களில் முதிர்ச்சிப்பெற்ற வழக்கறிஞர் திரு ஆர். செல்வராஜ் கண்ணன் அவர்களின் இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது,