கட்டிடத்தொழிலில் அனுபவம் வாய்ந்த ஒவ்வொரு எழுத்தாளரும்இ ஒவ்வொரு நிபுணரும் தங்களது கோணத்தில் வீடு கட்டுதலை விவரிக்க முற்படுகிறார்கள். அவர்களது நடை மற்றும் தொழிற்நுட்பக் கருத்துகள் சில வாசகர்களுக்கு விளங்குகிறது. சில வாசகர்களுக்கு விளங்காமலும் இருக்கிறது. இதற்கு மன்பு வெளியிடபட்ட நூல்கள் ஒரு சாதாரண மனிதனுக்கு வீடு கட்டுதலைப் பற்றிய மேலோட்ட அறிவையும்இ நடைமுறை சிக்கலையும் அறிவுறுத்துவதாக அமைந்திருந்தன. இந்த நூல் அவ்வாசகர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் நூலாகும். இன்னும் நுட்பமாக வீடு கட்டுதலைப் பற்றிய அனைத்து தொழிற்நுட்ப வி~யங்களையும் எளிய நடையில் செல்லும் முயற்சியாகும். அனுபவமும்இ திறமையும்இ தமிழறிவும் ஒருங்கே பெற்றஇ எழுத்தார்வமிக்க கட்டிடத்துறை பொறியாளரான திரு. ஏ.ஜி. மாரிமுத்துராஜ் அவர்கள் இந்த நூலில் ஏராளமான ஆலோசனைகளை கட்டுரை வடிவில் நமக்கு தந்திருக்கிறார். இவர் சொல்லியிருக்கும் நுட்பத்திலும் நுட்பமான விஷயங்கள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி களப்பணியாற்றும் பொறியாளருக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.