வினா விடை வடிவில் கட்டிடப் பொறியியலின் பன்முகத் தன்மை இந்நூலில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றிருக்கும் 400க்கும் மேற்பட்ட சிவில்தறை வினா விடைகளை ஒருவர் படித்தாரெனில். ஒட்டுமொத்த நவீன கால கட்டுமானத் துறையின் போக்கினை மிக எளிதாக கற்கலாம். அத்துடன் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் பொறியாளர்களுக்கான சமயோசித அறிவினை தூண்டக் கூடிய புதிர்கள் இந்நூலுக்கு மேலும் மெருகேற்றுகிறது. அஸ்திரவாரம் முதல், சுவர் கட்டுமானம், கான்கிரீட் தன்மை நீராற்றுதல், நவீன கால கட்டிடப் பொருட்கள், கட்டுமான முறைகள், வேதியில் பொருட்கள், பல்வகைச் சாதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என கட்டுமானத்துறையின் பல்வேறு முக்கிய கூறுகளை வினா விடை வடிவில் தொகுத்தளித்திருக்கும் முனைவர் திரு.டி.எஸ் தாண்டவமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். சிவில் பொறியியல் பாடதிட்டங்களை தாண்டிய கட்டிடப்பணியின் தன்மையினையும் நுணுக்கங்களையும் கட்டுரைகளாக, துணுக்குகளாக இதுவரை நூல் வடிவில் பல்வேறு தலைப்புகளில் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.