தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 3000 பேராவது சிவில் பொறியாளராக வெளிவருகிறார்கள் என ஒரு கணக்கு சொல்கிறது. கல்விக்கூடத்திலிருந்து களப்பணிக்கு வரும் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே அனுபவம் வாய்ந்த பொறியாளர்களுக்கு ஈடான அறிவைப் பெற்று விடுவதில்லை. அதனால் தான் நமது பதிப்பகம் அத்தகையோருக்கு பல்வேறு வழிகாட்டிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவும் அத்தகைய ஒரு நூல்தான். பில்டர்ஸ்லைன் ஆசிரியர் திரு. பா. சுப்ரமண்யன் அவர்கள் பல்வேறு சமயங்களில் தொழிற்நுட்பம் சார்ந்த, சாராத கட்டுரைகள்தான் அறிமுக பொறியாளர்களுக்கு ஏற்ற நூலாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. சிவில் படித்த அல்லது படிக்காத அனைத்து நிலையில் உள்ளோருக்கும் இந்த நூல் மிகவும் ஏற்றது. களப்பணிக்கு ஏற்ற பிற படிப்புகள், பயிற்சிகள், படிக்க வேண்டிய புத்தகங்கள், மென் பொருட்கள் ஆகியவற்றை பட்டியலிடும் இந்நுலிiஉ ஒரு வித்தியாசமான முயற்சி என்து தான் சொல்ல வேண்டும். மேலும், நவீனகால தொழிற்நுட்பங்கள், கான்கிரீட் பலத்தை அறிந்து கொள்ள உதவும் கருவிகள் போன்ற அத்தியாயங்கள் மெத்த படித்த பொறியாளருக்குக் கூட கை கொடுக்கும். நமது தாய்மொழியில் வெளிவந்திருக்கும் இந்நூல் நமது கட்டுமானத்துறைக்கு நிச்சயம் ஒரு நல்வரவு.