நம் நாட்டில் ஒரு சாதாரண குடிமகனால் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களுள் சட்டமும் ஒன்று, நிறைய படித்தவர்களும், வக்கீல்களும் மட்டுமே சட்ட வழிமுறைகளை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் எங்கு போவது? எப்படி கற்பது? எது சரி? எது தவறு?. சட்டங்கள்ப் பெரும்பாள்மையான ஷரத்துகள் நாம் அறியாதவை. ஏனோ இவற்றை கற்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நாம் முயல்வதில்லை. ஒருவேளை அந்தப் புத்தகங்களும், அதில் சொல்லப்பட்டிருக்கும் மொழிநடையும் கடினமாகத் தோன்றுவது, காரணமாக இருக்கும். ஆனால், பல்லாண்டுகள் வங்கி துறையில் பணியாற்றிவரும், சட்டத்துறையிலும் பணியாற்றி வருபவருமான வழக்கறிஞர் பி.எஸ். சந்திரசேகர் அவர்கள், இந்நூலில் அவற்றை எளிமைப்படுத்தி இனி நூலாக நம் கையில் தந்திருக்கிறார். வீடு அல்லது சொத்துக்கள் வாங்கும் போதும், விற்கும் போதும், பெயர் மாற்றும் போதும், ஆவணங்களில் பிழை திருத்தம் செய்யும் போதும், அடமானம் வைக்கும் போதும் நாம் பின்பற்ற வேண்டிய சட்ட வழிமுறைகளை எளிய தமிழில் இனிய நடையில் வேண்டிய உதாரணங்களோடு நமக்கு விளக்குகிறார்.