எல்லா வகைக் கட்டிடங்களுக்கும் ஊன்றுகோலாக இருப்பது பில்லர்கள்தான் என்பது யாவரும் அறிந்த செய்தி, அத்தகைய கான்கிரிட் பில்லர்களுக்கு முதுகெலும்பாக விளங்குவது இரும்புக் கம்பிகளால் ஆன சென்ட்ரிங் ஒர்க்குகள் தானே, அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சென்ட்ரிங் வேலைகள்ச் செய்யும் பணியாளர்களில் தொழிற்நுட்ப திறன் பற்றி நம்மில் எத்தனைபேர் கவலைப் பட்டிருக்கிறோம்? பெரும்பாலும் பள்ளிக்கல்வியை தாண்டாத இளைஞர்கள் தான் கம்பி வளைக்கும் பணிகளுக்கு வருகிறார்கள். இவர்கள் சீனியர்களிடம் வேலை கற்றுக்கொண்டு பிறகு தானாகவே வேலையை தலைமை ஏற்றுச் செய்யத் துவங்கிவிடுகிறார்கள். பொறியாளர்கள் சொல்வதையும் மேஸ்திரிகள் சொல்வதையும் குருட்டாம் போக்கில் கேட்டு செய்யும் கம்பி வளைக்கும் வினைஞர்கள்தான் இங்கு அதிகம். எனவே, சென்ட்ரிங் தொழிலின் முக்கியத்துவம் பற்றியும், கம்பிகளின் வகைகள், தரம், வளைக்கும்போது கவனிக்க வேண்டிய வியங்கள் போன்ற பல்வேறு கூறுகள் பற்றி இந்நூலில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஓரளவு தமிழ் படிக்கத்தெரிந்த அனைவருக்குமே நன்கு புரியும் வகையில் எளிமையாக அமைந்துள்ள டாக்டர். என்.வி.அருணாசலம் அவர்களின் இந்நூல் கட்டுமான உலகில் ஒர் வரப்பிரசாதமாகத் திகழும்.