ஈஸியாக வாங்கலாம் வீட்டுக்கடன் என்கிற இந்நூல் தொழிற்நுட்பவகையைச் சார்ந்தத அல்ல என்றாலும், இன்று பொதுமக்களுக்கு மிகவும் அசவியமான நூலாகவே இதைக் கருத வேண்டும். நடுத்தர மக்களில் பெரும்பாலோர்ககு இன்னமும் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் எவை? அவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? வீட்டுக் கடனைப் பெறுவதற்கு வேண்டிய தகுதிகள் என்ன? தேவையான ஆவணங்கள் என்ன? வழிமுறைகள் என்ன? எந்தமுறை மநப்பு லாபகரமானது? என்பது பற்றியெல்லாம் சிறிதளவும் தெரியாமல் இருக்கிறார்கள். நியை படித்தவர்கள் கூட இ.எம்.ஐ என்பதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். இந்நூலாசிரியரான பல்துறை வித்தகர் திரு.பா. தனபாலன் அவர்கள் அடிப்படையில் வங்கியில் உயர் பதவி வகிப்பதால், அவரது அனுபவ எழுத்துக்கள் நம்மைப் போன்றோருக்கு வெகு எளிதாக வழிகாட்டுகிறது. ஈஸியாக வாங்கலாம் வீட்டுக் கடன் என்கிற இந்நூல் வீட்டுக்கடன் வாங்க அல்லல்படும் ஆயிரமாயிரம் தமிழக மக்களுக்குத் தன்னம்பிக்கை அளித்து உறுதுணையாகத் திகழும் என்பது திண்ணம்.