கட்டுமானங்கள் தொடர்பான இயந்திரங்களையும், அதன் செயல்பாடுகளையும் அறிந்து கொள்வதென்பது சற்று கடினமான வி~யமத்தான். அதுவும் ஆங்கிலத்தில் இருந்தால் இன்னும் கடினமாகவே இருக்கும். என்னதான் வரையறைகளைக் கொடுத்து பாகங்களைக் குறித்துக் காட்டினாலும், அது செயல்படும் போது தான் நமக்கு ஒன்றிரண்டு விஷயங்கள் புரிபடும். ஆனால், இங்கு எளிய தமிழில் அழகிய நடையில் கட்டுமானத்துறையில் தற்காலத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் வெகு முக்கிய, அதிநவீன கட்டுமான இயற்திரங்களைப் பற்றிய விவரங்களும், செயல்பாடுகளும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த 20 இயந்திரங்கள் இல்லாமல் நவீன கால கட்டுமானத்துறை இல்லை என்றே சொல்லலாம். அதுவும் மிக எளிதாக நமக்கெல்லாம் புரியும்படி ஒவ்வொரு இயந்திரமும் தன்னைப் பற்றியும், தனது இயக்கங்கள் பற்றிறும் தானாகவே நம்மிடம் பேசுவது போல முற்றிலும் ஒரு புதுமையாக இந்த நூலாக்கம் அமைந்திருக்கிறது. ஷஇயந்திரம் பேசுகிறது| என்கிற தொடராக நமது பில்டர்ஸ்மைலன் கட்டிடத்துறை மாத இதழில் இந்த இயந்திரங்களின் அணிவகுப்பு மாதந்தோறும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதால் இதனi நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.