ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை பன்னடுக்கு கட்டுநர்கள் தான் பயன்படுத்த முடியும் என்றும் மெகா புராஜெக்டை செய்பவர்களுக்கு மட்டுமே ஆர்.எம்.சி உரியது என்றும் பலர் எண்ணுகிறார்கள். கட்டுமானச் செலவையும், நேரத்தையும், கூலியையுமு; பெருமளவு குறைக்க உள்ள ஒப்பற்ற தொழிற்நுட்பமான ஆர்.எம்.சியின் அனைத்து கூறுகளையும் மிக எளிதாகச் சொல்வதே இந்நூலின் நோக்கம். இதில் ஆர்.எம்.சியின் தரம் அறிவது. ஆம்.எம்.சியைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியது. இதன் அனுகூலங்கள் என்ன? என்பதை பற்றியெல்லாம் மிகவும் நன்கு ஆராய்ந்து நமக்கு தந்திருக்கிறார் பல்துறை வித்தகர். பயனெழுத்துப் படைப்பாளி திரு. சுப. தனபாலன் அவர்கள். கட்டுமானத்துறை தொடர்பாக அவர் தந்திருக்கும் நூல்களின் அணிவகுப்பில் இதுவும் ஒரு உயரிய இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறேன். பொறியாளர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும், சிவில் படித்த, படித்துவரும் மாணவர்களுக்கு மட்டுமன்றி தங்களது கனவு இல்லங்களின் கட்டுமானச் செலவை குறைக்க விரும்பும் அனைத்து பொதுமக்களுக்கும் இந்நூல் மிகவும் உரியதாகும்.