மனிதர்களுக்கு தொல்லைதரும் பூச்சிகள் என்றால் கரப்பான், கரையான், பல்லி, சிலந்தி, தேள், பூரான், எலி என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவை மனிதருடன் வசிப்பது எப்பொழுதுமே ஆபத்தானது. இவை நமது வசிப்பிடத்தை. படுக்கறையறையை. உடமைகளை நாசமாக்குவதுடன். நமது உணவுப் பொருட்களையும் விஷமாக்கிவிடுகிறது. ஏராளமான தொற்றுநோய் கிருமிகளையும், அதன் மூலமாக தொற்று நோய்களையும் மனிதர்களுக்கு பரப்பிவிடுகிறது. வேதியில் பொருட்கள் மட்டுமன்றி, தாவரங்கள், மூலிகைகள் கொண்டு கூட பல்வகையான பூச்சி இனங்களை நம்மால் விரட்ட முடியும். அவை இந்த நூலில் விவரமாக எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. என்னென்ன பூச்சிகளை எந்தெந்த முறைகளில் விரட்டலாம் என்கிற அரிய ஆலோசனைத் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பூச்சிகளால் நாம் பாதிக்கப்பட்டால் உடனே மேற்கொள் வேண்டிய முதலுதவி மற்றும் சிகிச்சை குறிப்புகளும் சொல்லப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.