நூல்களுள் பொழுதுபோக்கிற்காக படிப்பது, மகிழ்ச்சிக்காக படிப்பது, தகவல்களுக்காக படிப்பது என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் வழிகாட்டும் தகவல்களுக்காக ஒரு நூலைப் படிப்பது நம்முடைய நேரத்தையும் சரி, பணத்தையும் சரி ஒரு போதும் வீணாக்காது. அந்த வகையில் கட்டுமானத்துறையின் ஒரு அதிமுக்கியமான பணியை மிக எளிமையாக நமக்கு வழிகாட்டும் மற்றுமொரு தகவல் நூலாகத்தான் ‘மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தொட்டிகள் மற்றும் குழாய் அமைப்பு முறைகள்’என்னும் இந்நூலைக் கருத வேண்டும். மேல்நிலை,கீழ்நிலை நீர்த்தொட்டிகளை அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை, அதன் கொள்ளளவை தீர்மானித்தல், பராமரித்தல், குழாய்களை அமைத்தல், சந்தைக்கு வந்திருக்கும் வகைவகையான நீர்த்தொட்டிகளை பற்றிய விவரங்கள் ஆகியன ஒருங்கே தொகுக்கப்பெற்ற இந்நூல் பொறியாளர்களுக்கும், கொத்தனார் போன்றவர்களுக்கும் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பலன் தரும் என நம்புகிறோம். கோவையைச் சேர்ந்த பொறியாளர் திரு ஏ.ஜி.மாரிமுத்துராஜ் அவர்களின் அனுபவ எழுத்துக்கள், இத்துறைக்கு புதியவர்களாக வருகை தருபவர்களுக்கு, மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தொட்டிகளை அமைத்தல் பற்றிய தகவல்களை நிறைய இயம்புகிறது.