மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாகரீக மோகத்தில் அவர்கள் சொன்ன மூலிகை மருத்துவத்தையும், மூலிகை உணவையும் நாம் மறந்து விட்டோம். அது மட்டுமல்ல மூலிகைகளின் பெயர்களைக் கூட நாம் மறந்து விட்டு, ஆங்கில மருத்துவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறோம். இந்த நூல் நம்மை ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஆதாரமான அரிய மூலிகைகளையும், நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற மூலிகைகளின் பயன்களையும் தொகுத்து கூறுகிறது. படித்து, பாதுகாத்து, பயன் பெறுங்கள்.