இந்த உலகம் படைக்கப்ட்டு பலகோடி ஆண்டுகளுக்கு மனித இனத்தின் வயது வெறும் மூன்றரை லட்சம் வருடங்கள்தான். அவற்றுள், 200 வருடங்களாகத்தான் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். சரியாகச் சொல்லப் போனால், இந்த 200 வருடங்களில்தான் பூமிக்கும், இயற்கைக்கும் மனிதன் பெருமளவு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். அவற்றுள் ஒன்றுதான் மின் உற்பத்தி. ஆனால், மின் நுகர்வை நம்மால் முற்றிலுமாக தவிர்க்க முடியாது. வேண்டுமானால், சிக்கனமாகச் செலவழிக்கலாம். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிப்பது இயற்கைக்கு மட்டுமல்ல, நமது பர்ஸ_க்கும் உகந்தது. ஆகவே, இயற்கைக்கும், அரசாங்கத்திற்கும், நமது வருமானத்திற்கும் பெருமளவு நன்மை தரக்கூடிய ஒரே புத்தகமான வெளிவந்திருக்ககும் இந்நூலை எழுதியிருப்பதன் மூலம் திரு. சுப தனபாலன் அவர்களின் பொதுநல அக்கறை நன்கு புலனாகிறது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிகளில் சிலவற்றைப் பயன்படுத்தினாலே, ஆண்டிற்கு நமக்கு ஆயிரக்கணக்கில் மிச்சமாகும் என்பது நிச்சயம். பொதுமக்கள் மட்டுமன்றி மின்சார வாரியம், தமிழக அரசு என அனைத்துத் தரப்பினரும் போற்றக் கூடிய வகையில் வெளியாகும் ஒரே நூல் இது.