புதிய வீடோ, பழைய வீடோ பெயின்டிங் என்கிற வியத்திற்கு பிறகுதான் ஒரு வீட்டிற்கு பூரணத்துவம் கிடைக்கிறது. எத்தனை மோசமான வடிவமைப்புடைய கட்டிடமும் கூட சிறப்பான முறையில் பெயின்டிங் செய்யப்பட்டிருந்தால் காண்போரைக் கவரும். அதே போன்று பெயின்டிங் சொதப்பியிருந்தால் எத்தனை நன்றாக ஒரு கட்டிடம் வடிவமைக்கப் பட்டிருந்தாலும் எதிர்பார்த்த தோற்றத்தினைத் தராது. பொதுமக்களில் பலர் வீடு கட்டும்போது பெயின்டிங்கில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுவார்கள். கட்டிடத்தைப் பொறுத்தவரை பெயின்டிங் என்பது கடைசியாக செய்ய வேண்டிய வேலை என்பதால் அதை சிலர் தவிர்த்தும் விடுவார்கள். பெயின்டிங் என்பது கட்டிடத்திற்கு அழகூட்ட மட்டுமல்ல, பாதுகாப்பிற்காகவும்தான் என்பதை நாம் உணரவேண்டும். பெயின்டிங்கின் அருமை பற்றி விளக்கும் இங்நூலில் பெயின்டர்கள், பெயின்டிங் காண்டாக்டர்கள், சொந்தமாய் வீடு கட்டுவோர்கள் என யாவருக்கும் பயனுள்ள பல தகவல்கள் அடங்கியுள்ளன. பெயின்டுகளின் வகைகள் என்ன? எந்த அறைக்கு எந்த பெயின்ட்? எந்த நிறம்? கலப்பதற்குமுன் கவனிக்கவேண்டியது, சிக்கனமாய் பெயின்ட் செலவழிக்க வழிகள், பெயின்டர்க்குத் தேவையான டிப்ஸ்கள் போன்ற அரிய தகவல்கள் இந்த சிறிய புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. வீடு கட்டும் வாசகர்களுக்கென்றே பல்வேறு கட்டுமான தொழிற்நுட்ப நூல்களைத் தொடர்ந்து எழுதிவரும் பல்துறை வித்தகர், பயனெழுத்துப் படைப்பாளி திரு. சுப.தனபாலன் அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்நூல் பிராம்ப்ட் பதிப்பகத்தின் பெருமையை இன்னும் கூட்டும்.