பெண்ணே நலமா?
பெண்ணே நலமா?

பெண்ணே நலமா?

  • பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உபாதைகள், நோய்கள் அதற்கான எளிய தீர்வுகள்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

பெண்கள் என்பவர்கள் எத்தனைக்கு எத்தனை அழகானவர்களோ அத்தனை ஆரோக்கியமானவர்களா? என்று கேட்டால், நிச்சயமாக சொல்ல முடியாது. அவர்களுக்கான உடற்கூறு அப்படி. வாழ்க்கை முறையும், பணத்தைத் துரத்தும் வேகமும் அவர்களை ஆரோக்கியம் குறைந்தவர்களாக மாற்றி விட்டது. பணிச்சுமை  போதாதற்கு மனச்சுமை ஆகியன இரண்டும் சேர்ந்து மலரினும் மெல்லிய பெண்மையின்  பரிணாமத்தை  நவீனகால வாழ்வியல் சிதைத்து வருகிறது. இதன் விளைவு : ஒழுங்கற்ற மாதவிடாய், நீர்க்கட்டிகள், தைராய்டு, கடுமையான வயிற்று வலி, தலைவலி, உடல் குண்டாதல்  எனப்பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். முப்பதை தாண்டினாலே மூப்பு தான் என்கிற உடல் அவஸ்தையில்  பெரும்பான்மையான பெண்கள்  இக்காலத்தில் வாழ்கின்றனர்.  ஆனால், நமது பாட்டி மற்றும் மூதாதையர்கள் இப்படி ஆரோக்கியமற்றவர்களாக இல்லை. வீடு, காடு,  தோட்டம் எனப் பல இடங்களில் கடுமையான பணிகளைச் செய்யக்கூடியவர்களாகத்தான் வாழ்ந்தார்கள். அது போன்ற உடல் திடத்தை இக்காலத்துப் பெண்கள் எப்போதோ தொலைத்து விட்டோம். எது நம் உடலுக்கான உணவு? என்பதை மறந்து, எது நாகரீகமாக உணவு என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். அழகுக்குறிப்புகளுக்கு நாம் தரும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்துக்கு  எப்போதும் தருவதில்லை. தன் உடல் பற்றியும், அதைப் பேண வேண்டிய வழிமுறைகளும் அறியாதவர்களாகத் தான் பெரும்பான்மையான் பெண்கள் இருக்கிறார்கள்.  இந்நூல் பெண்களுக்கு உண்டாகும் அடிப்படை நோய்களை விலாவரியாக விவரிக்கிறது. சென்னையின் புகழ்பெற்ற பல மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் ஆலோசனைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறோம். படித்து பயனையுங்கள்.