நவீன தொழிற்நுட்பம் பக்கம் பார்வை திரும்புவதற்கு நமக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஒரு செங்கல்லின் வழக்கமான அளவை கூட மாற்றவோ, அதன் எடையைக் குறைக்கவோ, அதன் தயாரிப்பு முறையை மேம்படுத்தவோ நாம் இதுநாள் வரை முயன்றதே இல்லை. ஃப்ளை ஆஷ் கற்களை எல்லா வெளிநாடுகளும் தாரளமாக பயன்படுத்தும்போது, நாம் மட்டும் ஃப்ளை ஆஷ் கற்கள் புற்றுநோயினை தோற்றுவிக்கும் என்று சொல்லி கொண்டிருந்தோம். ஆற்று மணலுக்கு மாற்று மணலாக உருவாக்கப்பட்ட மணல் மற்றும் செயற்கை மணல் வந்த பிறகும் கூட, ஆற்று மணலுக்கு ஈடாகுமா? என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மனித உழைப்பு அரிதாகிப்போன இந்த காலத்தில் இன்னமும் நவீன தொழிற்நுட்பங்களையோ, உபகரணங்களையோ, இயந்திரங்களையோ பயன்படுத்தாமல் இருக்கிறோம். தற்போதுள்ள நவீன தொழிற்நுட்பங்களை அறிந்துகொள்ள முயலாமல் இருக்கிறோம். நேரமும் அதிகமாகி செலவும் அதிகமாகி கடனுக்கு உள்ளாகிறோம். திரு. சுப. தனபாலன் அவர்கள் இந்நூலில் நேரத்தை மிச்சப்படுத்தும் ஏராளமான நவீன தொழிற்நுட்பங்களை வகைப்படுத்தி நூலாக தொகுத்திருக்கிறார். இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், காணப்படும் தகவல்கள் வாயிலாக இந்நூல் ஆசிரியர் திரு.சுப.தனபாலன் அவர்களின் கடின அறிவுசார் உழைப்பு நமக்கு நன்கு புலனாகிறது.