மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன.அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. உலகில் இந்தியாவில் மூலிகைகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. மூலிகை வளம் நிறைந்த ஒரே நாடாக இந்தியா மட்டுமே காணப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக, கிராமப் புறங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகை வகைச் செடிகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மூலிகைகளை பயன்படுத்தும் அளவில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. மூலிகைகளை உணவாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து உண்ணுவதன் மூலம் பல நோய்களை நாம் விரட்டி அடிக்கலாம். சூப் ஒரு மெயின் உணவு கிடையாது. ஆனால், பசியைத் தூண்டுகிற அருமருந்து ஆகும். அதாவது, சூப்பைக் குடித்த பின்பு தான், மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இதில் சில வகை சூப்பில், பூண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பூண்டு உபயோகிக்க விரும்பாதவர்கள் அதனைத் தவிர்க்கலாம். அதே மாதிரி, பெரும்பாலான சூப்களில், மிளகுதூள் சேர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தேவைப்படாதவர்கள், இதனைத் தனியாகவும் சேர்த்துக் கொள்ளலாம். சூடான சூப் வயிற்றுக்கு நல்லது. இதோ, வெரைட்டியான மூலிகை சூப்களைச் செய்து "சூப்பராக" கொண்டாடுங்கள்!