ஒவ்வொரு தனித் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. பெயின்டர், கார்பென்டர், பிளம்பர் போன்ற தொழில்களுக்கென்று தனிக் கல்விகளும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. வழிவழயாக செய்து கொண்டிருந்த குலத் தொழில் பழக்கம் கூட இப்போது வழக்கொழிந்து வருகிறது. எனவே, சிறுசிறு தொழில்களை நன்கு உணர்ந்து கற்றுத் தேறிய தொழிலாளர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். ஆட்கள் பற்றாக்குறை நிலவும் இக்காலக் கட்டத்தில் எவர் வேண்டுமானாலும், எந்த தொழிலை வேண்டுமானாலும், உடனே செய்யத் துவங்கி விடலாம் என்கிற சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது. இழைப்புளி பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இழைப்புளி பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இழைப்புளியை வைத்திருந்தாலே போதும், நீயும் ஒரு கார்பென்டர் என்கிற அலட்சிய மனப்பாங்குதான் பெரும்பாலும் காணப்படுகிறது. இவர்களுக்கு நடுவே தானும் கார்பென்டிங் போன்ற தொழில்களை முறையாகக் கற்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களும் உள்ளனர். அவர்களுக்காகத்தான் கார்பென்டர் கையேடு என்கிற இந்நூலை வெளியிடுகிறோம். மரத்தின் வகைகள் என்ன? எந்த வேலைக்கு எந்த மரம்? கார்பென்டிங் தொழிலுக்குத் தேவையான கருவிகள் என்ன? மரச் சாமான்களைப் பராமரிப்பது எப்படி? கார்பென்டிங் தொழிலுக்குத் தேவையான டிப்ஸ்கள் போன்ற பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய இப்புத்தகத்தை வெளியிடுவதில் பெருமகழ்வு கொள்கிறது.