காக்க காக்க சருமம் காக்க
காக்க காக்க சருமம் காக்க

காக்க காக்க சருமம் காக்க

  • முகம், சருமம பளபளக்க முன்னூறு குறிப்புகள்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்  மிஸ் வேர்ல்ட், மிஸ் யூனிவர்ஸ் போன்ற பட்டங்கள் நமது இந்தியப் பெண்களுக்கு வழங்கப்பட்ட போது, அதன் உள்ளிருக்கும் வணிக அரசியல் பற்றி ஏதும் அறியாமல், பெருமை பொங்க கைதட்டி மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், அதன் மூலம் உலகளாவிய பல அழகுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியப் பெண்களை தங்கள் வணிக வலையில் வீழ்த்தின. நமது பெண்கள் காலம் காலமாக தங்கள் அழகுக்காக பயன்படுத்தி வந்த சமையலறை பொருட்களை தூக்கி எறியச் செய்தன. திட்டமிட்ட இச்சதியில் ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளாக நம் பெண்கள்  சிவப்பழகு பெற முயற்சித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் கிடைத்தபாடில்லை.  தற்காலிகமாக அழகாகிறார்கள். ஆனால் அதன் பக்க விளைவாக இளமையிலேயே முகச்சுருக்கமும் கருமை நிறமும் படர்ந்து திகைத்துப் போய் நிற்கிறார்கள். ஓயாத பணி, அலைச்சல், தவறான உணவுப் பழக்கங்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் வேதிப்பொருட்களின் நச்சு கலந்த கிரீம்,ஜெல், பவுடர்கள் , சோப்,ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்துதல் மூலமாகசிறு வயதிலேயே வயதான தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.  நமது முன்னோர்கள் சொன்ன உணவுப் பழக்கங்களும். அழகு குறிப்புகளும் எந்த காலத்திலும், எல்லா நாட்டவர்க்கும் பொதுவானவை. நிரந்தர அழகை, சருமப் பொலிவைத் தரவல்லவை. அவற்றுள் மிகச்சிலவற்றை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறோம். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு, வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, வெயிலினால் ஏற்பட்ட கருமை போக்க, முகப்பரு, தழும்பு, கரும்புள்ளிகள் சுருக்கம் அகல என ஏராளமான இயற்கை சித்த மருத்துவ குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும், பலவித இயற்கைமுறையிலான ஃபேஸ் பேக்குகள், ஃபேஷியல்கள், நேச்சுரல் பிளீச்சிங் முறைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. படித்துப் பார்த்து செயல்படுத்தி இயற்கையான பொலிவைப் பெறுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.