கற்க, கற்க நிறைவுறாத கட்டுமானத்துறையில் நூல்களுக்கும் பஞ்சமில்லை. அந்த வரிசையில் இதோ இன்னுமொரு பொக்கிஷம் கற்போம் கட்டிடக்கலை கட்டடப் பொறியியல் படிப்பவர்கள், கட்டடப் பொறியியல் படித்தவர்கள், சிவில் துறை பேராசிரியர்கள், களப்பணியில் புதிதாக நுழைந்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள் ஏன் வீடு கட்டும் பொது மக்கள் கூட சமீப காலத்திய பயன்மிகு தொழில்நுட்பம் குறித்த பல தகவல்களை இந்நூலில் அறிந்து கொள்ளலாம். கட்டிடத்துறையில் ஏற்படவுள்ள எதிர்கால மாற்றங்க்கள், புதுவகை கான்கிரீட் இயந்திரங்க்கள் ,வலிவுமிக்க கான்கிரீட் வ்கள், கட்டடம் கட்டும்போது கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள் எனப் பல்வேறு நோக்கிற்காக இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக உங்கள் பார்வைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் இறுதியில், மிக முக்கியமான கட்டிடத்துறைச் சார்ந்த ஐயங்களுக்கும் உகந்த பதில்களை நூலாசிரியர் சொல்லியிருப்பது, இந்நூலை இன்னும் செறிவுள்ளததாக ஆக்குகிறது. படித்து பயன் பெறுங்கள்.