கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சிவில் பயின்ற மாணவர்களுக்கான பொறி ஏ.பி. அருள்மாணிக்கம் அவர்களின் கட்டிடவியல் தொழிற்நுட்ப கட்டுரைகளின் தொகுப்பினை கற்க கற்க கட்டிடப் பொறியியல்| என்கிற நூலாக வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம். இந்நூலாசிரியர் பொறி ஏ.பி. அருள்மாணிக்கம் கட்டிடவியலை நன்கு கற்றவர். வடிவமைப்பு பொறியியலில் பிரசித்தி பெற்றவர். ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருடைய ஏராளமான நூல்கள் சிவில் பொறியியலுக்கான தொழிற்நுட்ப விஷயங்களை கூட எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். அஸ்திவாரம் அருகே பள்ளம் தோண்டலாமா? மண் பரிசோதனையின் முக்கியத்துவம் என்ன? மழைநீர் சேகரிப்பு கட்டுமானமுறை மேற்கொள்வது எப்படி? திருமண மண்டபங்கள், பள்ளி கல்லூரிக் கட்டிடங்கள் கட்டும் போது கவனிக்க வேண்டியவை, வடிவமைப்பாளரின் பொறுப்புகள், கடமைகள் போன்றவற்றை கட்டுரைகளாக எடுத்துரைக்கிறார். மேலும், நமது சிவில் சிலபஸ் குறை என்ன? நமது சிவில் பேராசிரியர்கள் தரம் எப்படி உள்ளது? மாணவர்கள் பாடப் புத்தகத்துடன் படிக்க வேண்டியது போன்றவற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறார். மாணவர்களும் பொறியாளர்களும் இந்நூலினைப் படித்து பயனுற வேண்டுகிறோம்.