கட்டுமான தொழிற்நுட்பங்கள், கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் ஆகியன குறித்து ஏராளமான கட்டிடவியல் வல்லுநர்கள், நிபுணர்கள் போன்றோர் தங்களது அறிவுப் பொக்கிஷத்தினை நூல்களாக தந்திருக்கிறார்கள். அவ்வகையில் கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை என்கிற தேர்ந்த கட்டுமான தொழிற்நுட்ப நூல் ஒன்றை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம். இந்நூலாசிரியர் பொறி. ஏ.பி. அருள்மாணிக்கம் கட்டிடவியலை நன்கு கற்றவர். வடிவமைப்பு பொறியியலில் பிரசித்த பெற்றவர். ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருடைய ஏராளமான நூல்கள் சிவில் பொறியியலுக்கான பாட திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர் இந்நூலில் கடினமான தொழிற்நுட்ப விஷயங்களை கூட எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். அஸ்திவாரங்கள் ஏன் பலம் இழக்கின்றன? பால்கனிகள் ஏன் இடிகின்றன? பேஸ்மெனட் பகுதிகளில் நீர்க்கசிவு வராமல் தடுப்பது எப்படி? கட்டுமான பணியிடத்தில் பளு தூக்கிகளால் விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி? பசுமை கட்டுமானத்திற்கு ஏற்றபடி வடிவமைப்பது எப்படி? வணிக மையங்கள், காம்ப்ளக்ஸ்கள் போன்ற கட்டுமானங்களை வடிவமைப்புக்கும் போது கையாளக்கூடிய உத்தி என்ன? நீர்நிலை பகுதிகளில் கட்டுமானங்களை எழுப்புவது எப்படி? என பல்வேறு கட்டிடவியல் நுணுக்கங்களை இந்நூலில்ப் படித்து பயனுற வேண்டுகிறோம்.