நமது தாய்மொழியாம் தமிழில் இரசாயனங்களின் அறிமுகம் மற்றும் பயன்பாடு பற்றிய நூல் வெளியிடப்படுகிறது என்றால் அதற்கு திரு. சுப. தனபாலன் போனற் வல்லமை பெற்ற எழுத்தாளர்களும் அதை வரவேற்கத் தயாராக இருக்கும் நீங்களும் தான் காரணம். கட்டுமானத்துறைக்கு போது வெளிவந்திருக்கும் தொழிற்நுட்பங்களுள் வேதியில் சார்ந்த தொழிற்நுட்பங்கள் தான் மிகவும் பெரிதாக பேசப்படுகிறது. கான்கிரீட் கட்டிப் போகாமல் இருக்க வேண்டுமா? கான்கிரீட்டின் வலிமையை கூட்ட வேண்டுமா? இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டுமா? என எல்லா நோக்கங்களுக்கும் தற்போது இரசாயனங்கள் வந்திருக்கின்றன. அஸ்திவாரம் அமைக்கும் போது தேவைப்படக்கூடிய இரசாயனங்கள், பெஸ்ட் கன்ட்ரோலுக்கான இரசாயனங்கள், கான்கிரீட் சார்ந்த இரசாயனங்கள், ஒட்டு வேலை, பெயிண்ட் வேலை, இன்டிரியர் வேலைக்கான இரசாயனங்கள், நீர்க்கசிவு வெடிப்பு விரிசல்களை சரிசெய்வதற்கான இரசாயனங்கள் என ஒவ்வொன்றையும் அழகாக வகைப்படுத்தி நமக்காக எடுத்துரைக்கி;றார்.