கட்டுநர்களுக்கும், கண்ட்ராக்டர்களுக்கும் இந்நூல் கட்டிடவியல் குறித்த பயனுள்ள அறிவினை ஊட்டும். கட்டிடத்துறையில் போலிப் பொறியாளர்களை இனங்காணுவது எப்படி? வாடிக்கையாளரிடம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் என்ன ஆகும்? புராஜெக்டை மார்கெட்டிங் செய்வதில் உள்ள சிரமம் என்ன? மனித வள மேலாண்மையை கையாள்வது எப்படி? நிதி நெருக்கடியில் சிக்காமல் இருப்பது எப்படி? மன உளைச்சல் ஏற்படுத்தும் பிரச்சனைகளை களைவது எப்படி? கட்டுமானப் பணிகளில் ஏற்படும் பொதுவான ஐயங்கள் என்ன என்பதையயல்லாம் பட்டியலிட்டு தொகுத்து விளக்குகிறார் ‘கட்டுநர்கள் கவனிக்கவும் ’என்கிற இந்நூலாசிரியர் பா.சுப்ரமண்யம். பெயருக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு கட்டுநர்களும், காண்ட் ராக்டர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. மிகுந்த தொழிற்நுட்ப பின்புலம் இல்லாதவர்களும் இந்நூலினை புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படிருப்பது இதன் சிறப்பு.