இன்றைய உணவு நாளைய மருந்து
இன்றைய உணவு நாளைய மருந்து

இன்றைய உணவு நாளைய மருந்து

  • காய்கறிகள், பழங்கள், தானியங்களின் மருத்துவ பயன்கள்
  • Price : 30.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

நமக்கு உடல் ஆரோக்கியத்தைத் தரும் முதற்காரணி யாதெனில், உணவைத் தவிர வேறில்லை. 1980-க்கும் முந்தைய காலகட்டத்தில், தமிழர்களின் உணவு முறைகள் மிகச்சிறந்து இருந்தன.  நோயற்ற வாழ்வை இலக்காக வைத்து அதற்கேற்ற உணவுகளைத் தயாரித்து நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். தற்போதைய காலகட்டத்தில் நமது உணவுப்பழக்கங்கள் மேற்கத்திய நாகரிகத்தைச் சார்ந்து மிகவும் மோசமாகிவிட்டது.  உணவே மருந்து என்கிற நம் முன்னோர்களின் உணவுமுறை பிற்பாடு மெல்ல மெல்ல சிதைந்துவிட்டது.  இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் உணவு, ரெடிமேடாக கிடைக்கும் அரைவேக்காட்டு சப்பாத்திகள், ஜீரணமாவதற்கு தமதமாகும் பீட்சா, பர்கர்கள் ஒரு நோயாளி சமுதாயத்தை உருவாக்கி வருகிறது. நமக்கு ஏற்ற உணவு எது நமக்கு தேவையான ஊட்டச்சத்து எது? அது எந்த உணவுப் பொருளில் கிடைக்கிறது? என்கிற வழிக்காட்டுதல் தற்போதைய தலைமுறையினரிடையே இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம். இன்றைய உணவு நாளைய மருந்து என்கிற சித்தாந்தத்தினை இந்நூலின் வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.   வாழைப்பூ, முள்ளங்கி, அவரை, வெண்டை, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள், மாதுளை, விளாம்பழம், பப்பாளி உள்ளிட்ட பழங்கள், சோளம், தினை, கம்பு, சோயா உள்ளிட்ட பயிறு வகைகள் சோம்பு, கடுகு, மிளகு போன்ற சமையலறை பொருட்கள் என ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறோம்.  படித்துப் பயன் பெறுங்கள்.