கட்டுமானப் பொறியியல் என்பது கடல் போல. நாளுக்குநாள் கையாளப்படும் கட்டுமான முறைகள்,தொழிற்நுட்பங்கள் அதுபற்றிய செய்திகள் ஆகியவற்றை முழுதும் அறிந்துகொள்ள நம் நேரம் போதாது. என்றாலும், இத்துறையில் சீக்கிரம் நிபுணத்துவம் பெற இந்தக் காலகட்டத்தில் இணையதளம், மென் பொருட்கள் துணையின்றி முடியாது. அதுமட்டுமல்ல, ஆன்ட்ராய்டு போன்களின் வருகை மற்றும் அதன் பரவலாக்கம் என்பது பலரையும் தொழிற்நுட்ப மேம்பாடு அடையச் செய்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். சிவிலைக்கற்றுக்கொள்ள, பிரபலமான பேராசிரியர்களின் வகுப்புகளின் வீடியோக்களை காண, கட்டுரைகள், தகவல்கள் அறிய ஏராளமான இணையதளங்கள் உண்டு. பிளான் வரைய, திட்டம் தீட்ட, பிளம்பிங் பணிகள் திட்டமிட, கணக்கியல் மற்றும் நிர்வாகத்திற்கென பல மென்பொருள்கள் உண்டு. அது போலவே ஆப்ஸ் எனப்படும் செயலிகளில் பிளான் வரைய, கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்க, சிவில் கேள்வி பதில் படிக்க, சிவிலில் முக்கிய சூத்திரங்கள் அறிய, கட்டிட விதிகளை அறிய என நிறைய செயலிகள் உண்டு. கால்குலேட்டர்கள், கன்வெர்டர்கள், கேம்கள் என அவை கணக்கில் அடங்காது. இவற்றில் முக்கியமான செயலிகள், இணையதளங்கள், மென்பொருட்கள் ஆகியவற்றின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய ஹலோ எஞ்சினியர் என்கிற இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம். கட்டுநர்கள் , பொறியாளர்கள், சைட் சூபர் வைசர்களுக்கு மட்டுமன்றி சிவில் பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பயன்மிக்கதாக அமையும்.