கட்டிடத்தின் கூரையை அதாவது கட்டிட மேல் தளத்தை தகுந்த வெதரிங் கோர்ஸ் அமைப்பதின் மூலம் ஒட்டுமொத்தக் கட்டிடத்தையும் காப்பாற்ற முடியும். ஆனால், நமது மக்களைப் பொறுத்த வரையில் வெதரிங் கோர்ஸீக்காக செலவு செய்ய அஞ்சுகிறார்கள் அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இதனால் அளவுக்கு அதிகமான வெயில் மற்றும் அடைமழைக்கு மாறி மாறி ஆளாகும் கட்டிட மேல்தளம் சிறிது சிறிதாக கட்டிடத்தின் உள் கூரை, தாய்ச் சுவர்கள், பில்லர்கள் போன்றவற்றை பாதிக்க ஆரம்பித்து விடுகிறது. நாம் கட்டும் வீடு நமக்குப் பிறகு நம்முடைய தலைமுறைகளுக்கும் சொந்தமாகிறது. அப்படிப்பட்ட வீடு என்றென்றும் உறுதியாக இருக்க வேண்டாமா? இதனை மனதில் எண்ணி, முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி அவர்கள் ஒரு வீட்டின் மேல்தளத்திற்கு இன்றியமையாத வெதரிங் கோர்ஸ் அமைத்தலைப் பற்றியும், முறைகள் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.