வீட்டுப் பராமரிப்பு என்பது ஒரு கலை, நிறைய பேருக்கு தங்களுடைய வீட்டை என்றும் புதியது போல வைத்துக் கொள்றள வேண்டும் என்கிற அக்கறை உள்ளதே தவிர, நிஜத்தில் செயல்படுத்துவது இல்லை. வீட்டுப் பராமரிப்பு மேற்கொள்வதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதற்கான வழிமுறைகளையும் அவர்கள் அறிந்திருப்பதில்லை. தவிர, நிரைய செலவாகும் என்கிற தயக்கம் வேறு. இந்த நூல் நிச்சயம் அந்த தயக்கத்தினை களையும். கட்டிடம் ஏன் பழுதடைகிறது? பழுதடையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன? விரிசல்களுக்கான காரணம் என்ன? நீர்க்கசிவை நீக்குவது எப்படி? என கட்டிட பராமரிப்பு தகவல்கள் இந்நூலில் ஏராளம். வெயில் காலம், மழைக்காலம், பண்டிகைக் காலம், விடுமுறைக்காலம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளையும் இந்நூலாசிரியர் பட்டியலிடுகிறார். மேலும், வீட்டின் அறைகளையும், பொருட்களையும் பராமரிக்கும் முறைகளை அடுக்குவதோடு தீயிலிருந்தும், திருட்டிலிருந்மு; நம்வீட்டை பாதுகாக்கும் முறைகளையும் தௌ;ளத்தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நூல் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கும், ஃப்ளாட்டுகளில் வசிப்பவர்களுக்கும் நூறு சதவீதம் உரிய கையேடாக திகழும்.