வீடு முதற்கட்டப் பணிகள் என்னும் இந்நூலில் வீடு கட்டும் பொதுமக்களும்இ கட்டுமானத் துறையினருக்கும் கிடைத்திருக்கும் இன்னும் ஒரு வழிகாட்டித் தோழன் என்றே நாம் சொல்லலாம். இந்நூலை எழுதியிருக்குமு; பல்துறை வித்தகர்இ பயனெழுத்துப் படைப்பாளி திரு. சுப தனபாலன் அவர்கள் கட்டுமானத்துறையின் பல்வேறு பிரிவுகளை உன்னிப்பாக ஆராய்ந்துஇ எளிய தமிழில் நுணுக்கமாக எழுதக் கூடியவர். அவரது கைவண்ணத்தில் வெளிவந்திருக்குமு; இந்நூலில் வழக்கமாக அவர் பயணிக்கும் தளத்திலிருந்து மாறிஇ வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான முதற்கட்டப் பணிகளைக் கூறுபடுத்தி விளக்கிறியிருக்கிறார். தமிழ் படிக்கும் இந்நல்லுலகில் கதைஇ கவிதைஇ வரலாறுஇ இலக்கியம் போன்ற வழக்கமான விளிம்புகளில் அகப்படாதுஇ கட்டுமானத்துறைச் சார்ந்த தொழிற்நுட்பத்தில் கரைகாண முயற்சிக்கும் முக்கிய வெளியீடாக வீடு முதற்கட்டப் பணிகள் என்னும் இந்நூலைக் குறிப்பிடலாம். மெத்தப் படித்த பொறியாளர்களுக்காக அல்லாது. பொது மக்களுக்கான வடிவத்தில் எழுத்து நடையில் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.