பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய உரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை, ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத் துறையில் இருப்பதாக வல்லூநர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு முக்கிய தொழில்தான் தச்சுத்தொழில். இந்த தொழிலுக்கான முதல் நூலினை வெளியிட்ட பெருமை பிராம்ட் பதிப்பகத்தையே சாரும். கார்பென்டர் கையேடு என்கிற நூல் தச்சுத் தொழில் புரிவோர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும். அந்த வரிசையில் இன்னும் ஒரு கட்டிட மரவேலைகளைச் சார்ந்த புதிய நூலை தற்போது வெளியிட்டடிருக்கிறோம். வீடு, கட்டிட மரவேலைகள் எனும் இந்நூல் வீடு கட்டும் சாதாரண மக்களுக்கு மர வேலைகளைக் குறித்த பல்வேறு அடிப்படை விஷயங்களையும், விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். மரங்களின் பயன்பாடுகள், வேலைப்பாடுகள், எந்த வேலைகளுக்கு எந்த வகை மரங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஸ்மார்ட் ஹோம் ஃபர்னிச்சர்களின் வடிவமைப்பு மாதிரிகள், மரத்தினை சிச்கனமாகப் பயன்படுத்துவது எப்படி என ஏராளமான விஷயங்களை இந்நூல் நமக்குக் கற்றுத் தருகிறது. அது மட்டுமன்றி, தச்சுத் தொழிலில் தற்போதுள்ள புதிய தொழிற்நுட்பங்களையும், மரப்பொருட்களுக்கு மாற்றாக என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு விளக்குகிறது. மேலும், வீட்டு உபயோக மரச் சாமான்களை பராமரிப்பு குறித்தும் இந்நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இறுதுயில் சொல்லப்பட்டிருக்கும் மரம் குறித்த கேள்விகளுக்கான நூலாசிரியரின் பதில்கள் இந்நூலை இன்னும் முழுமையாக்குகிறது.