இன்று நாம் பார்க்கும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் அனைவருமே சிறு,குறு குடிசைத் தொழில்களைத் துவங்கி படிப்படியாக முன்னுக்கு வந்தவர்கள் தான். ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணியாற்றுவது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நாம் வரையறுக்கப்பட்ட பொருளாதார வலையில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்று அர்த்தம். ‘நிலையான வருமானம் வருகிறது’ என்ற காரணம் ஒன்றாலயே பெரும்பாலோர் கடைசி வரை ஊழியர்களாகவே பணியாற்றி ஓய்ந்து விடுகிறார்கள். வாழ்நாளின் கடைசிகால கட்டத்தில் புறநகரில் கால் கிரவுண்ட் மனை 450 ச.அடி வீடு என்பது தான் இவர்களது அதிகபட்ச சாதனையாக இந்தச்சமூகத்தில் பார்க்கப்படுகிறது. சொந்தத்தொழில் செய்யலாம் என முடிவு எடுத்து களத்தில் இறங்கும் சில பேரும் அடுத்தடுத்த நஷ்டம், பணமுடை, எதிர்பார்த்த லாபம் வராது போதல், சந்தைப்படுத்து தலில் தோல்வி போன்ற பல காரணங்களால் சொந்தத் தொழிலை விட்டு மறுபடியும் மாதச் சம்பள வேலைக்கே சென்றுவிடுகிறார்கள். தனக்கேற்றத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது, அதிலுள்ள பல நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வது, நட்டம் வராமல் தடுப்பது, அகலக்கால் வைக்காமல் படிப்படியாக முன்னேறுவது போன்ற சூட்சமங்களை கற்றுக்கொண்டால் யார் வேண்டுமென்றாலும், தொழில் துவங்கி லாபம் பார்க்கலாம். அதற்கு இந்த நூல் உங்களுக்கு உதவும்.