ரியல் எஸ்டேட் வழிகாட்டி
ரியல் எஸ்டேட் வழிகாட்டி

ரியல் எஸ்டேட் வழிகாட்டி

  • மனை வாங்குவோர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைவோர் அறிந்து கொள்ள வேண்டியவை..
  • Price : 50.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

ரியல் எஸ்டேட் என்பது நாட்டின் மிகப்பெரிய துறையாகும். பல்வேறு விதமான சமூக தளங்களில் நிலைகொண்டுள்ள இந்தத் துறையில் தெரிந்தோ, தெரியாமலோ நாம் எல்லோருமே ஈடுபட்டிருக்கிறோம். வீடு வாங்காத, ஃப்ளாட் வாங்காத, கட்டிடம் கட்டாத, மனை வாங்காத மனிதர்கள் மிகச் சிலரே. ஆனால், அதிக அளவில் மோசடிகளும், ஏமாற்று வேலைகளும் நடைபெறுவதும் இந்தத் துறைதான் என்பது வேதனைக்குரியது. அதிக அளவிலான பணம் புழங்கும் இடத்தில் சட்டங்களும், விதிகளும், கடுமையாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், ஏனோ இன்று முதல் ரியல் எஸ்டேட் துறை முறைப்படுத்தப்படாமலேயே இருக்கிறது. அதனாலேயே முறைகேடுகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. நம்முடைய வாழ்நாள் சேமிப்பை அப்படியே முதலீட்டாக்கும் ரியல் எஸ்டேட் துறையை நன்கு கற்றுத் தெளிவதுதான் இன்றைய சூழ்நிலைக்கு கட்டாயத் தேவை. அதை;தான் நமது பல்துறை வல்லுநர். பயனெழுத்து படைப்பாளி| திரு. சுப. தனபாலன் அவர்கள் இந்நூலில் நமக்கு செய்ய முற்பட்டிருக்கிறார். மனை வாங்கும், விற்கும் பொதுமக்கள் மட்டுமன்றி, ரியல் எஸ்டேட் முகவர்கள், தரகர்கள், நிறுவனங்களும், இந்நூலினைப் படித்து, ரியல் எஸ்டேட் தொழில் என்பது என்ன என்பதை நன்கு கற்று உணரலாம்.  நாட்டின் எல்லா தொழில்களுக்கும் படிப்பு உண்டு, பட்டம் உண்டு. பட்டயம் உண்டு. ஆனால், அன்றாம் பலகேடி ரூபாய்கள் புழங்கும் ரியல் எஸ்டேட் துறைக்குத்தான் தனி படிப்பு என்று எதுவும் இல்லை. இந்த நூல் அந்தக் குறையை நிச்சயம் போக்கும். அல்லது, பிற்பாடு ரியல் எஸ்டேட் துறைக்கான தனிக்கல்வி அமையுமெனில், அதற்கு ரியல் எஸ்டேட் வழிகாட்டி எனும் இந்த நூல் நிச்சயம் பிள்ளையார் சுழியாக அமையும்.