பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய ஒரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை. ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத் துறையில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அத்தனை தொழில்களையும் அறிந்திருக்கவில்லை என்றாலும், அதனை செய்யும் அனைத்து பணியாளர்களையும் மேற்பார்வையிடும் சைட் சூபர்வைசரின் வேலை ஒரு மேஜிக் போன்றதாகும். ஒரு சைட்டில் ஒரே சமயத்தில் படிக்காத தொழிலாளர்களிடையேயும், படித்த பொறியாளர்களிடையேயும், கட்டுநர்கள், காண்ட்ராக்டர்களிடையேயும், சப்ளையர்களிடையேயும் ஒரே சமயத்தில் தொடர்பு வைத்திருக்கும் ஓர் அதிசய ரோபோ என்றே சைட் சூபர்வைசரைக் குறிப்பிடலாம். பெரும்பாலான கட்டுமானப் புராஜெக்டுகளில் பணிபுரியும் சூபர்வைசர்கள் மதிப்பும், முக்கியத்துவமும் மிக்க இந்த அரிய பணியினை செய்வதற்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்கிறாரா? என்று சொல்ல முடியாது. காண்ட்ராக்டர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தெரிந்த அல்லது உறவுமுறை இளைஞர்கள், எஸ்.எஸ்.எல்.சி., ட2 போன்றவற்றை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என யோசிப்பவர்கள்தான் பெரும்பாலும் சைட் சூப்பர்வைசர்களாகப் பணிக்கு வந்து விடுகிறார்கள். என்ன காரணத்தாலேயோ, இவர்களுக்கான பயிற்சிகளை அளிக்க கட்டுமானத்துறை தவறிவிடுகிறது. இந்நூல் நிச்சயம் அந்தக் குறையினைப் போக்கும். சைட் சூபர்வைசர்களுக்கு மட்டுமின்றி சைட் மேலாளர்கள், காண்ட்ராக்டர்கள், புராஜெக்ட் பொறுப்பாளர்கள் போன்றவர்களுக்கும் இந்நூல் நிச்சயம் ஒரு நல்ல வழிகாட்டி.