ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. பண பலம், படை பலம், அரசியல் பலம் கொண்டு அப்பாவி மக்களைக் காப்பதற்காகத்தான் சட்டங்கள் உள்ளன. ஆனால், நிறைய பேருக்கு சட்டத்தை அணுகுவதற்கு தெரிவதில்லை. சட்டம் நமக்கு செய்திருக்கும் காப்புகளைப் பற்றிஅறிவதில்லை. சொத்து தொடர்பான அடிப்படைச் சட்டங்களை அறிந்து கொள்ள இந்த நூல் நல்ல வழியைக் காட்டும். * தாய்பத்திரம் என்பது சொத்து பரிமாற்றத்தில் அவசியமா? * தாய்பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? * பட்டா இல்லாத நிலத்தை வாங்கலாமா? * உயிலை திருத்தவோ மாற்றவோ முடியுமா? * பத்திரப்பதிவை மட்டும் நம்பி சொத்து வாங்கலாமா? * இரண்டாவது மனைவியின் வாரிசுகளிடம் இருந்து வீடு வாங்கலாமா? * இளவல் (மைனர்) சொத்தை வாங்குவது சரியா? * பினாமியில் சொத்து வாங்கினால் என்ன பிரச்சனை வரும்? * சொத்து வாங்கும் முன் பத்திரிகைகளில் அறிவிப்பு தர வேண்டுமா? * இரண்டாவது மனைவியின் வாரிசுகளிடம் இருந்து வீடு வாங்கலாமா? போன்ற உங்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கும் இந்நூலில் தீர்வுகள் உண்டு.