கட்டுமான மேலாண்மை என்கிற இந்நூல் அரியவகைகளிலும் மிக அரிதான நூல் என்றுமு கூறலாம். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான லோண்மை வழி முறைகளையும், கட்டுநராக இருப்பவர்கள் வெகு நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய தொழிற்நுட்ப விஷயங்களையும், பொது நிர்வாக மேலாண்மை நுணுக்கங்களையும் இந்நூல் மிக எளிய முறையில் விவரிக்கிறது. ஒரு கட்டுநர் அறிந்து கொள்ள வேண்டிய துறைசார்ந்த மேலாண்மை விஷயங்களான திட்டமிடல், பட்ஜெட் இடுதல், பாதுகாப்பு, மனிதவளம், மார்க்கெட்டிங், சரக்கிருப்பு. மின்னியல் மேலாண்மை, நவீன தொழிற்நுட்பங்களின் பயன்பாடு, இடர் மேலாண்மை, ஒப்பந்த மேலாண்மை, ஜாயிண்ட் வென்சர், விளம்பர வெளியிடல், வாடிக்கையாளர் திருப்தியைப் பெறுதல் போன்ற அதிமுக்கிய விஷயங்களை எளிய நடையில் இனிய தமிழில் சுவையான உதாரணங்களோடு எளிதில் புரியும்படி இந்நூலாசிரியர் திரு. பா. சுப்ரமண்யம் அவர்கள் விளக்கி இருக்கிறார். மேலும், இந்நூலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் பொது மேலாண்மை அம்சங்களான நேர மேலாண்மை, ஒருங்கிணைப்பு. குழு மேலாண்மை, உத்திரவிடுதல், முடிவெடுத்தல், கட்டுப்படுத்துதல், கண்காணத்தல் போன்றவை கட்டுநர் என்கிற வட்டத்தைத் தாண்டி அனைவருக்குமே ஏற்றதாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத்துறை பெருமக்களுக்கும், புராஜெக்ட் மேலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கக் கூடிய இந்நூலை வெளியிடுவதில் பிராம்ப்ட் பதிப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.