நம்மைப் பொறுத்தவரை தொழிற்நுட்ப நூல் என்றால் கணினி சார்ந்த நூல் மட்டுமே என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. அப்போது மற்ற துறைகளுக்கு யார் தமிழில் புத்தாக்கப்படைப்புகளை வெளியிடுவது? நமது தமிழகத்தில் ஆண்டுதோறும் 4000 சிவில் பொறியாளர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளி வருகிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்தில் சிவிலை படித்து முடித்த அந்த தமிழ் மாணவப் பொறியாளர்கள் களப்பணிக்கு வரும் போது தடுமாறவே செய்கிறார்கள். மாணவர்கள் மட்டுமில்லை. அனுபமிக்க பொறியாளர்கள் சிலருக்கும் இப்பிரச்சினை இருக்கச் செய்யும். மேலும் கட்டிடக்கலை பற்றிய புரிதல் இல்லாத கட்டுநர்களும் இத்துறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய ஒரே நூலாக இந்த கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி நூலினைக் குறிப்பிடலாம். இதில் ஒரு பொறியாளருக்குத் தேவையான அனைத்து அனுபவரீதியான விஷயங்களுடன், அன்றாம் கடைபிடிக்க வேண்டிய விதிகளையும் தொகுத்திருக்கிறார் இந்நூலாசிரியர். மேலும், அரிதிலும் அரிதான சிவில் பொறியியல் அகராதி, பொறியாளர்கள் அவசியம் அறிய வேண்டிய அளவீடுகள், அட்டவணைகள், கட்டுமானப் பொருள் கணக்கீடுகள் ஆகியவை சிவில் பொறியியல் அகராதி, பொறியாளர்கள் அவசியம் அறிய வேண்டிய அளவீடுகள், அட்டவணைகள், கட்டுமானப் பொருள் கணக்கீடுகள் ஆகியவை சிவில் பொறியாளர்களுக்கும், சூபர்வைசர்களுக்கும், கட்டுநர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயன் தரும்.