கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு
கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

  • கட்டுமானப் பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • Price : 60.00
  • Prompt Publication
  • Language - Tamil
This is an e-magazine. Download App & Read offline on any device.

Preview

‘பாதுகாப்பு விதிகள் தோற்றுப்போகும் இடங்களில், விபத்துக்கள் வெற்றி பெறும்’ என்கிற பொன்மொழி கட்டுமானத் தொழிலுக்கு மட்டுமல்லாது அனைத்து விதமான தொழில்களுக்கும் பொருந்துவதாகும். எந்நேரத்தில் என்னாகுமோ? எந்தெந்த விதங்களில் விபத்துக்கள் ஏற்படுமோ? என்ற எதிர்பார்ப்பின் நடுவே, தலைக்கு மேல் எப்பொழுதும் கத்தி தொங்கிக்கொண்டேயிருக்க, அதற்கு கீழ் நின்றுகொண்டுதான் நமது கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.  அலட்சியம் என்பது மட்டுமல்ல, அறியாமை காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. விதிபகளை மதிக்காத அலட்சியத்தை நாம் எதுவும் செய்ய முடியாது. அதனை தொழிலாளர்கள் உணர்ந்து, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க முன்வர வேண்டும். ஆனால், அறியாமையை நம்மால் விரட்ட முடியும் அல்லவா?.  எனவேதான், கட்டுமானத் தொழிலில் விபத்துக்களை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன? எந்தெந்த விதமாக விபத்துக்கள் ஏற்படக் கூடும்? பாதுகாப்பு அதிகாரியின் கடமைகளும், பொறுப்புகளும் என்ன?  நவீன பாதுகாப்பு உபகரணங்கள் யாவை? தொழிலாeர்கள் உணர்ந்து கொள்e வேண்டிய, தத்தம் பணிக்குரிய பாதுகாப்பு விதிகள் என்ன? விபத்து ஏற்படின் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? என்பதைப் பற்றியயல்லாம் விலாவரியாக பொறிஞர் எஸ். சிவராமன் அவர்கள் இந்நூலில் எடுத்துரைக்கிறார்.  இலட்சக்கணக்கான மதிப்புடைய பொருட்களையும், உடமைகளையும் காப்பதோடு மட்டுமல்லாமல், விலைமதிப்பே கிடையாத உயிர்களையும் இந்நூல் காக்க வல்லதாகும் என்பதில்  ஐயமில்லை.